search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "முன்னாள் முதல் மந்திரி"

    பீகார் மாநிலத்தில் நடைபெற்ற தேர்தல் பிரசார கூட்டத்தில் மேடை சரிந்ததில் முன்னாள் முதல் மந்திரி அதிர்ஷ்டவசமாக காயமின்றி தப்பினார். #LSpolls #Gaya #JeetanRamManjhi
    பாட்னா:

    பாராளுமன்ற தேர்தல் அடுத்த மாதம் 11ம் தேதி தொடங்கி 7 கட்டங்களாக நடைபெற உள்ளது. இதற்காக பாஜக, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் தீவிரமாக வேலை செய்து வருகின்றன.

    இதற்கிடையே, பீகார் மாநிலத்தில் உள்ள கயா தொகுதியில் பாராளுமன்ற தேர்தல் ஏப்ரல் 11ம் தேதி நடைபெறுகிறது. இங்கு ராஷ்ட்ரிய ஜனதா தளம், ஹிந்துஸ்தானி அவாம் மோர்ச்சா உள்ளிட்ட கட்சிகள் கூட்டணி அமைத்து போட்டியிடுகின்றன.

    இந்நிலையில், பீகார் மாநிலம் கயா தொகுதியில் தேர்தல் பிரசார கூட்டம் இன்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பீகார் முன்னாள் முதல் மந்திரியும், ஹிந்துஸ்தானி அவாம் மோர்ச்சா கட்சி தலைவருமான ஜித்தன் ராம் மஞ்சி பங்கேற்றார். இதில் ராஷ்ட்ரிய ஜனதா தளம் கட்சியை சேர்ந்த சுரேந்திர யாதவ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    பொதுக்கூட்டம் நடைபெற்றபோது தொண்டர்கள் சூழ்ந்ததால் மேடையின் ஒரு பகுதி திடீரென சரிந்தது. இதில் ஜித்தன் ராம் மஞ்சி அதிர்ஷ்டவசமாக காயமின்றி தப்பினார். அவரை தொண்டர்கள் பாதுகாப்பாக அழைத்துச் சென்றனர்.

    முன்னாள் முதல் மந்திரி பங்கேற்ற தேர்தல் பிரசார பொதுக்கூட்ட மேடை சரிந்தது பீகாரில் பரபரப்பை ஏற்படுத்தியது.
    #LSpolls #Gaya #JeetanRamManjhi
    குஜராத்தில் முன்னாள் முதல்-மந்திரி சங்கர்சின் வகேலா வீட்டில் ரூ.3 லட்சம் மதிப்பிலான நகை மற்றும் ரூ.2 லட்சம் பணம் திருடப்பட்டது குறித்து போலீசார் விசாரணை நடத்தினர். #GujaratCM #ShankersinhVaghela
    ஆமதாபாத்:

    குஜராத் மாநிலத்தில் கடந்த 1996-97-ல் முதல்-மந்திரியாக இருந்தவர் சங்கர்சின் வகேலா. இவரது வீடு காந்திநகரின் புறநகர் பகுதியான பெதப்பூரில் உள்ளது. சொகுசு மாளிகை போல அமைந்திருக்கும் இந்த வீட்டில் ஏராளமான பணியாளர்கள் வேலை செய்து வருகிறார்கள். இதில் நேபாளத்தை சேர்ந்தவர்களும் அடங்குவர்.

    இந்த நிலையில் வகேலாவின் மனைவிக்கு சொந்தமான ரூ.3 லட்சம் மதிப்பிலான நகை மற்றும் ரூ.2 லட்சம் ஆகியவை மாயமானது கடந்த மாதம் கண்டுபிடிக்கப்பட்டது. இது தொடர்பாக அவர்கள் வீட்டு பணியாளர்களிடம் விசாரணை நடத்தப்பட்டது. அப்போது வகேலா வீட்டில் பணியாற்றி வந்த நேபாளத்தை சேர்ந்த ஒரு தம்பதிதான் இந்த நகை மற்றும் பணத்தை திருடிச்சென்றிருப்பது தெரியவந்தது.

    கடந்த ஆண்டு அக்டோபர் மாதமே அவர்கள் தாய்நாடு திரும்பிய நிலையில் அப்போதே இந்த பணம் மற்றும் நகையை திருடிச்சென்றதாக தெரிகிறது. இது தொடர்பாக பெதப்பூர் போலீசில் தற்போது புகார் செய்யப்பட்டு உள்ளது. அது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.  
    இமாசலப்பிரதேசத்தின் முன்னாள் முதல் மந்திரியான வீர்பத்ர சிங் உடல்நலக் குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். #Virbhadra Singh
    சிம்லா:

    இமாசலப்பிரதேசம் மாநிலத்தின் முன்னாள் முதல் மந்திரியாக பதவி வகித்தவர் வீர்பத்ர சிங் (84). இவரது உடல்நிலை நேற்று பலவீனம் அடைந்ததை தொடர்ந்து, அங்குள்ள இந்திராகாந்தி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார்.

    இதுகுறித்து டாக்டர்கள் கூறுகையில், முன்னாள் முதல் மந்திரி வீர்பத்ரசிங் உடல்நிலை பலவீனம் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு பல்வேறு சோதனைகள் நடத்தப்பட உள்ளது. தற்போது அவரது உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது என தெரிவித்துள்ளனர்.

    முன்னாள் முதல் மந்திரி வீர்பத்ர சிங் மருத்துவமனையில் சேர்ந்ததை அறிந்த முதல் மந்திரி ஜெய்ராம் தாக்கூர் அங்கு சென்று பார்த்து அவரது உடல் நலம் குறித்து கேட்டறிந்தார். 

    வீர்பத்ர சிங், இமாசலப்பிரதேசம் மாநிலத்தில் 6 முறை முதல் மந்திரியாக பதவி வகித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. #Virbhadra Singh
    உத்தரகாண்ட் முன்னாள் முதல்–மந்திரி என்.டி.திவாரி உடல்நிலை குறைவால் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். #NDTiwari
    புதுடெல்லி:

    உத்தரகாண்ட் மாநில முன்னாள் முதல்–மந்திரி என்.டி.திவாரி, மூளை செயல் இழப்பால் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் முதல் டெல்லியில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் தொடர் சிகிச்சை பெற்றுவருகிறார்.

    92 வயதான என்.டி.திவாரிக்கு நேற்று  முதல் இரண்டு சிறுநீரகங்களும் செயல்படாமல் பழுதடைந்தது. இதைத்தொடர்ந்து அவருக்கு டயாலிஸ் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    இந்த நிலையில் அவருக்கு வயிற்றில் ஏற்பட்ட தொற்றால் கடுமையாக உடல்நிலை பாதிக்கப்பட்டது. இதனால் அவர் அவசர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டு உள்ளார். அவரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.

    இதுகுறித்து அவரது மகனான ரோகித் சேகர் திவாரி கூறுகையில், ‘எனது தந்தையின் உடல் நிலை மிகவும் கவலை அளிப்பதாக உள்ளது. ஆஸ்பத்திரியில் அவர் உயிருக்காக போராடிக்கொண்டிருக்கிறார்.

    அவர் உடல் நலம் பெற உத்தரகாண்ட் மக்கள் பிரார்த்தனை செய்ய வேண்டும்’ என கேட்டுக்கொண்டு உள்ளார். #NDTiwari  #Tamilnews
    ×